உள்ளதே சொல்வோம், நல்லதே சொல்வோம்.

முஸ்லீம்களும் தினமலரும்.

நான் யாரையும் குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம்...


நான் மிகவும் மதிக்கும் மதம், மேலும் எல்லாம் வல்லவன் இறைவன் என்று ஓரிறை கொள்கையே நானும் கொண்டுள்ளேன்.



ஆனால் எனக்கு மதம் பிடிக்கவில்லை அல்லது மதத்தை எனக்கு பிடிக்கவில்லை

எனது மனதில் தோன்றியதைதான் பதிவு செய்கிறேன்.

சமிபத்தில் தினமலரை கண்டித்தும், அதனுடைய செயல்பாடுகளை தடை செய்ய கூறியும் ஏராளமான போரட்டாங்களும், ஆற்பாட்டங்களும் நடைபெற்றன... ஏன் தமிழ்மணத்தில் கூட பல பதிவுகள் இதைப்பற்றி. காரணம் அனைவருக்கும் தெரிந்துருக்கும், இருந்தாலும் நான் சொல்கிறேன்... நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரமாக வெளிட்டார்களாம். துபாய் போன்ற இடங்களில் தினமலர் மின் ஊடகத்தை தடை செய்து விட்டார்களாம். கேலிச்சித்திரம் வரைந்தது கண்டிப்பக கண்டிக்க கூடியதுதான், மாற்று மததினரை புண்படுத்துவது முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள கூடாது, இதற்கு தினமலர் ஆசிரியர்தான் பொறுப்பேற்று கொள்ளவேண்டும். இதைப்பற்றி என்னுடைய கண்டனமும் இருக்கும்.

என்னுடைய கேள்விகள்...

1. நபிகள் நாயகம் மனிதர்தானே. இந்த பூமியில் பிறந்து இறந்தார் நம்புகிறீர்கள் அல்லவா? அவர் விமர்ச்சனதுக்கு அப்பார்பட்டவரா?

2. அடுத்த நாட்டு உதவியை ஏன் நாடினீர்கள்? (தினமலரை தடை செய்ய)

3. ஒரு எதிப்புக்காக ஒன்றுகூடும் நீங்கள், தாங்கள் சமுதாய மக்களின் படிப்புக்காக/நலனுக்காக/வரதட்சனை ஒழிப்பிற்காக என்ன் செய்தீர்கள்?

4. இஸ்லாத்தை பற்றி கூற, இது ஏன் நல்ல வாய்ப்பக பயன் படுத்தி கொள்ளகூடாது?

5. ஒருத்தர் ஒரு தவறை சுற்றிக்காட்டினால், உன்னிடம் இல்லாததா, நீங்க பன்னாததா என்று ஏன் கூறுகிறீர்கள்?


6. அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்களே? ஏன்?

எல்லருக்கும் ஏன், எப்படி, எதுக்கு, காரனம் என்ன அப்படிங்கிற கேள்வி இருந்துகிட்டே இருக்கும்... எதுவும் உண்மையா இருக்கும் பட்சத்தில் விளக்கமளிப்பதில் என்ன தயக்கம்?

பிகு... பின்னூட்டம் போடும் அனைவரும் கண்ணியம் எழுத்தில் காட்ட வேண்டுகிறேன். இதுதாண்டா சான்ஸ் அப்படின்னு அடுத்த மதத்தை விமர்ச்சிக்க வேண்டாம்.



அன்பே சிவம்

19 பேரு இதப்பத்தி என்ன சொல்லிருக்காங்கன்ன...

RATHNESH said:

விடுபட்டுப் போன கேள்விகளில் ஒன்று:

தினமலர் வெளியிட்டுள்ள பல்வேறு இஸ்லாம் மார்க்க நல்ல செய்திகள் கட்டுரைகளை எப்போதாவது படித்திருக்கிறீர்களா?

இது உங்களுக்கு:

தினமலர் இது வரை வெளியிட்டுள்ள இஸ்லாம் மார்க்க நற்செய்திகளுக்காக அதற்கு "இவர்களால்" தரப்பட்ட இலவச விளம்பரமாக இதனை ஏன் கருதிக் கொள்ளக் கூடாது?

அனானி அக்னிக்குஞ்சு said:

This post has been removed by a blog administrator.

Robin said:

தினமலர் பத்திரிக்கை பல வருடங்களாக கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது. தினமலரைப் போன்ற விஷச் செடிகளை தமிழகத்தில் வளர விடுவது தமிழகத்தின் ஒற்றுமைக்கு ஊறு விழைவிக்கும்.

narsim said:

ஆஜர்.. தல!

நர்சிம்

குரங்கு said:

Thanks for visit and comment Rathnesh

good question...

Indian said:

பதிவை ஏன் ஒளித்து வைத்தீர்கள்?

nagoreismail said:

உங்களுடைய ஓரிறை கொள்கைக்கு பாராட்டுக்கள்.

மனிதம் கொல்லும் மதம் பிடித்தல் சரியில்லை தான்.

பதில் 1: நபிகள் நாயகம் பிறந்தார் இறந்தார் என்று மட்டும் எங்களது நம்பிக்கையில்லை, அவர் 'அகிலத்தின் அருட்கொடை' என்பதும் எங்கள் நம்பிக்கை, இது எங்கள் நம்பிக்கை தானே தவிர தினமலரை நம்ப வேண்டும் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை.

பதில் 2: பார்த்தீங்களா? முஹம்மது நபியை அகிலத்தின் அருட்கொடை என்று சொன்னேன் அல்லவா? அது துபாய் காரனும் அப்படியே தான் நம்புகிறான். அது அவனையும் தான் பாதிக்கும், இது எங்களுக்குள்ளேயே நாங்கள் செய்து கொண்ட உதவி தான். இதில் அடுத்த நாட்டு என்ற கேள்வி பொருந்தாது.

பதில் 3: இந்தியாவில் சில மாநிலங்களில் படிப்பு, வேலைக்காக போராடி இட ஒதுக்கீடு கிடைத்து இருக்கிறது, சில ஊர்களிலன் ஜமாத்தார்கள் வரதட்சனை வாங்கினால் நாங்கள் நிகாஹ் செய்து வைக்க மாட்டோம் என்று ஊர் கட்டுப்பாடு மாதிரி விதித்துள்ளார்கள். ஆனால் இதை எல்லாம் செய்ய வில்லை என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்தாமல் விட்டிருக்க முடியாது.

பதில் 4: இஸ்லாத்தை பற்றி மீடியாக்கள் தொடர்ந்து செய்து வரும் மோசடிகளை பரப்பி வருகிறது, இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்கள் அனானி குஞ்சுகள் வரை பரவியிருக்கிறது, குயிலின் இன்னிசையை காகத்தின் கரைச்சல் கெடுத்து விடுவதில்லையா? இதனால் அல்லவை தரும் தினமலரை புறக்கணியுங்கள் என்று போராடுகிறார்கள்.

பதில் 5: தவறு செய்யாதவன் தான் முதல் கல்லை எடுத்து எரிய வேண்டும் என்பதால். ஈயத்தை பார்த்து பித்தளைகள் இளிக்க கூடாது அல்லவா? அதற்காக தான்

பதில் 6: அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள் தான், ஆனால் தினமலர் அலுவலகத்தில் வேலை செய்யும் யாரையும் கொளுத்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அப்படி எல்லாம் செய்யாமல் கண்ணியமாக நடந்து கொள்ள இறைவன் என் சகோதரர்களுக்கு அருள் புரிய வேண்டும். அவர்களும் உணர்ச்சியை கட்டுபடுத்த ஜிஹாத் (முயற்சி) செய்ய வேண்டும்

நண்பர் ரதினேசுக்கு,
அங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, தினமலர் போன்ற ஏடுகள் நல்ல செய்திகள் எழுதுகிறார்களே என்று மகிழ்வடைந்து விடக் கூடாது, அதில் ஏதாவது விஷமம் இருக்கும், நுண்ணரசியல் புரியாமல் ஏமாந்து சிக்கி சின்னாபின்னமாக நாங்கள் தயாரில்லை

இது தான் சான்சுன்னு மத்த மதத்தை பத்தி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டிருந்தும் ஒரு நண்பர் முழுதாக படிக்காமல் மார்பழகு என்றெல்லாம் எழுதி காயப்படுத்துகிறார் பாருங்கள், உங்கள் கடைசி கேள்வி தான் ஞாபகத்திற்கு வருகிறது

நான் ஜிஹாத் செய்ய போகிறேன்.

பின்னூட்டம் பெரியசாமி.. said:

This post has been removed by a blog administrator.

பின்னூட்டம் பெரியசாமி.. said:

This post has been removed by the author.

சுவனப்பிரியன் said:

//குயிலின் இன்னிசையை காகத்தின் கரைச்சல் கெடுத்து விடுவதில்லையா? இதனால் அல்லவை தரும் தினமலரை புறக்கணியுங்கள் என்று போராடுகிறார்கள்.//

ரசித்தேன்.

பாபு said:

அநானி அக்னிக்குஞ்சு உடைய வக்கிர மனதின்; சம்பந்தமேயில்லாத கமெண்ட்டுக்கு முஸ்லிம்கள் அதே பாணியில் பதில் சொன்னால் அவர்களை உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும் மதவெறியாளர்களாகவும் பார்க்கிறோம். உண்மையில் அது எதிர்வினை என்பதை எப்பவும் போல மறந்து.

சம்பந்தமேயில்லாத கமெண்ட்டுகளை நீங்கள் தவிர்த்திருக்கலாமே குரங்கு சார்

குரங்கு said:

@Indian said...
நான் எங்கே ஒளித்து வைத்தேன்?


வருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி நாகூர் இஸ்மாயில்.

பாபு said:

//இதுதாண்டா சான்ஸ் அப்படின்னு அடுத்த மதத்தை விமர்ச்சிக்க வேண்டாம்.//

என்று சொல்கிற நீங்களே அந்த வக்கிரமனதின் கமெண்ட்களை ஏன் அனுமதித்து இருக்கிறீர்கள்?

புரியலயே

r.selvakkumar said:

This post has been removed by the author.

r.selvakkumar said:

//இதுதாண்டா சான்ஸ் அப்படின்னு அடுத்த மதத்தை விமர்ச்சிக்க வேண்டாம்//

அடுத்த மதம் என்று எந்த மதத்தைக் குறிப்பிடுகறீர்கள்? நீங்கள் மட்டும் அடுத்த மதத்தை விமர்சிக்கலாம், மற்றவர்கள் செய்யக் கூடாதா?

//நபிகள் நாயகம் மனிதர்தானே. இந்த பூமியில் பிறந்து இறந்தார் நம்புகிறீர்கள் அல்லவா? அவர் விமர்ச்சனதுக்கு அப்பார்பட்டவரா?//

உங்களின் இந்த வரிகளே முஸ்லீம்களின் மத உணர்வை மதிக்காத ஒரு பதிவுதான்.

//பின்னூட்டம் போடும் அனைவரும் கண்ணியம் எழுத்தில் காட்ட வேண்டுகிறேன்.//

'அனானி அக்னிக்குஞ்சு'வின் பின்னூட்டத்தில் ஏதாவது ஒரு வரியிலாவது கண்ணியமுண்டா?

//எனக்கு மதம் பிடிக்கவில்லை அல்லது மதத்தை எனக்கு பிடிக்கவில்லை//

உங்களை நீங்களே ஏமாற்றி்க்கொள்வது போல, எங்களையும் ஏமாற்ற நடுநிலை ஜல்லியடிக்காதீர்கள். உங்களுடைய கடைவரி அன்பில் சிவன்தான் ஒளிந்து கொண்டிருக்கிறார். சிவன் நிச்சயமாக கிறிஸ்துவோ, முஸ்லீமோ அல்ல.

கடைசியாக ஒன்று.

தலைப்பை சரி செய்யுங்கள்.
"முஸ்லீம்கலும்" என்பதை "முஸ்லீம்களும்" என்று திருத்துங்கள்.

நான் உங்களை குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம்.

குரங்கு said:

Dear all,

I don’t wish to hurt any one, if anyone feels hurt, really apologies about it… see actually I want to know some clarification about the Muslims so these question. I can’t take any responsibility about the comments by the commenter. I was waited till now someone give response about that comments… see babu, selvakumar and others… if we are hiding something, next peoples never been understand. We should ask many questions about all… we are human being, born with questions… if muslims having answer about that, why they need to hesitate it? Let them open. Don’t think, that I’m supporting other religion, as start I said, I believe one god. If I take Hindusm or Christinism, cant tolerate with them believes and God structure. What I want to say with “Anbe sivam” means “Love is Almighty”, please don’t see with statue face of Siva, who is having 2 wives and living like a human being… sorry to say, I’m having much comments and much question about Hindu gods. If I started ask, everyday need to ask aswell its endless.

Thanks to all for participant here, I expected much answer…

Really appreciate Mr. Nagoor Ismayil.

Once again deeply sorry about this…

Thanks

உருப்புடாதது_அணிமா said:

எங்க போய்டீங்க???

சீக்கிரமா ஒரு அனல் பறக்கிற பதிவ போடுங்க

Naina said:

அன்பு சகோதரரே!

நீங்கள் இஸ்லாமியர்களிடம் கேட்டுள்ள கேள்விகளுக்காக முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

1. நபிகள் நாயகம் மனிதர்தானே. இந்த பூமியில் பிறந்து இறந்தார் நம்புகிறீர்கள் அல்லவா? அவர் விமர்ச்சனதுக்கு அப்பார்பட்டவரா?
முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீதுண்டவதாக!) அவர்கள் தனது உயிரை விடவும் மேலாக முஸ்லிம்களாகிய நாங்கள் மதிக்கிறோம். நபியவர்கள் மீது மாற்று கருதுடையவர்களுக்குள்ள கோபமெல்லாம் அவர்கள் கொண்டு வந்த கொள்கையால் தானே தவிர தனிபட்ட குரோதத்தால் அல்லவே. எனவே இஸ்லாத்தின் கொள்கைகளை மாற்று கருத்துடையோர் விமர்சிப்பதில் முஸ்லிம்களுக்கு எவ்வித கோபமும் எழாது. அதனால் தான் பல்வேறு முஸ்லிம் அறிஞர்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்டும் குற்றச்சாட்டுகளை கூறுவற்காக அழைத்து அதற்கான விளக்கங்களையும் அளிக்கின்றனர். ஆனால் தனிமனித தாக்குதல் என்பது நாகரிகமற்ற செயல் என்பதனை அறிவுடையோர் ஆட்சேபனை செய்யமாட்டார்கள்.

2. அடுத்த நாட்டு உதவியை ஏன் நாடினீர்கள்? (தினமலரை தடை செய்ய)?
தினமலர் பத்திரிக்கை எந்தெந்த வெளிநாடுகளில் விற்பனை செய்யபடுகிறதோ அந்த நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள், அப்பத்திரிக்கையின் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வை ஆடசியாளர்களிடத்தில் கூறி, எனவே இப்பத்திரிக்கையை தடை செய்யவேண்டும் என்று கேட்டது தவறா? சமுதாயத்திற்கு கேடானவற்றை தடைசெய்வது சமூகத்திற்கு
நன்மையையே தரும்.

3. ஒரு எதிப்புக்காக ஒன்றுகூடும் நீங்கள், தாங்கள் சமுதாய மக்களின் படிப்புக்காக/நலனுக்காக/வரதட்சனை ஒழிப்பிற்காக என்ன் செய்தீர்கள்?
உங்களுடைய இக்கேள்வி இஸ்லாமியர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். எந்த மார்க்கம் மக்களைப் பார்த்து சிந்திக்க மாட்டீர்களா? என்று குர்ஆனில் பல்வேறு இடங்களில் கேள்வி கேட்டு கல்வியின் அவசியத்தை உணர்த்தி காட்டியும், அந்த சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கி போனது மிகவும் கேவலத்திற்குரியதாகும். உங்களுடைய இந்த விமர்சனத்தை கொண்டு, பிறரிடம் அனுதாபத்தை பெறநாடாமல். அவமனமாக எண்ணி கல்வி அறிவில் உயர்நிலை பெற உந்ததல் பெற வேண்டும்.
எந்த மார்க்கம் "பெண்களுக்கு திருமண கொடையை அளித்து மணமுடிக்க கூறியதோ, அந்த முஸ்லிம்களின் பெண்களிடம் வரதட்சணை என்னும் கொடிய தீமையில் இறைகோடபாட்டிற்கு எதிரானது என்ற சலனம் கூட இல்லாமல் இருப்பது, என் சமுதாயம் அறியாமை இருளில் மூழ்கி இருப்பதற்கு இன்னுமொரு உதாரணம். இதில் ஆறுதலான விசயம் என்னவென்றால் 80களில் ஏற்பட்ட விழிப்புணர்வால் மக்களிடையே போதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாற்றங்களும் சிறிது ஏற்பட்டுள்ளது.

4. இஸ்லாத்தை பற்றி கூற, இது ஏன் நல்ல வாய்ப்பக பயன் படுத்தி கொள்ளகூடாது?
இஸ்லாத்தின் மீது வைக்கபடும் ஒவ்வொரு குற்றசாட்டுகளும் விமர்சனங்களும் இஸ்லாத்தை பற்றி கூற ஒரு நல்வாய்ப்பாக கருத வேண்டும் இன்னும் சொல்ல போனால், அவர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அதனால் இஸ்லாத்தை பற்றி கூற ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் கூற்றை நான் முழுமையாக ஏற்கிறேன்.

5. ஒருத்தர் ஒரு தவறை சுற்றிக்காட்டினால், உன்னிடம் இல்லாததா, நீங்க பன்னாததா என்று ஏன் கூறுகிறீர்கள்?
இது போன்று யார் சொன்னாலும் அது அபத்தமான அறிவீனமான கேள்வியே. தனது தரப்பின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு சரியான விளக்கத்தை கூற வேண்டியது தானே முறையாகும். அது தவிர்த்து அடுத்த தரப்பின் மீது வேறு குற்றசாட்டை சொல்லி தனது தரப்பு தவறுக்கு நியாயம் கற்பிக்க முடியாது.

6. அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்களே? ஏன்?
மனிதன் உண்ர்ச்சிகளுக்கு ஆட்பட கூடியவனே. முஸ்லிம்கள் மட்டுமே உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பது சரியான குற்றசாட்டாக தெரியவில்லை.
நிச்சயமாக கோபம் கொள்வதை கட்டுபடுத்த தவிர்த்து கொள்ளவும் அதற்கான இறைவெகுமதிகள் குறித்தும் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீதுண்டவதாக!) அவர்களின் பொன்மொழிகள் ஏராளமாக உள்ளன. எனவே இஸ்லாம் அதனையும் கற்று கொடுக்கவே செய்துள்ளது.

நன்றியும் வாழ்த்துக்களும்

அன்பு சகோதரன்
நெய்னா முஹம்மது

Basheer said:

இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம், அனைத்து மானிடபிறவிக்கும் வாழ்க்கை முறையை சொல்லித் தருகிறது. இதை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லீம்க்ள்.

இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீதுண்டவதாக!) அவ‌ர்க‌ளின் க‌ருத்து, கொள்கை குறித்து விவாதம் செய்வதாக இருந்தால், விவாதத்திக்கு நாங்கள் தயார். பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த ஒருவரை, முஸ்லீம்களே அவருக்கு உருவம் கொடுத்து பார்த்ததில்லை,(இஸ்லத்தில் உருவவழிபாடு கிடையாது), மேலும் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் இதே போல் கேலி சித்திரம் வரைந்து உலகம் முழுவதும் கண்டன கனைகளுக்கு உற்பட்டு இருக்கும் இவ்வேளையில் தினமலர் இப்படி ஒரு கேலி சித்திரம் வரைய வேண்டிய அவசியம் என்ன? இது முழுக்க முழுக்க முஸ்லீம்களை சீன்டி பார்க்கும் வேலையா இல்லையா?

தினமலர் முஸ்லீம்க்ளுக்கும், கிருஸ்தவ, தலீத்களுக்கு எதிராக எழுதிய பொய் ம‌ற்றும் திரித்து எழுதிய செய்திகளை தொகுத்து திராவிட கழகத்தின் கண்காட்சியே நடத்தி இருக்கிரார்கள். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள தி.க அலுவலகத்தை நாடவும்.

அடுத்த வருடம் பொது தேர்தல் வரும் நிலையில் கலவரத்தை ஏற்படுத்தி அந்த இரத்ததில் வெற்றி திலகமிட ஆசை படும் கட்சிக்கு ஆதரவக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கமே அன்றி வேரு என்ன நோக்கத்திக்காக தினமலர் இதே போல் கேலி சித்திரம் வரைந்திருக்கும்?

பொது மக்கள் ஆகிய நாம் இதை ஆரம்பத்திலேயே கண்டிக்காவிட்டால்.... குஜராத், ஒரிசா, கர்நாடகம். இத்த பட்டியலில் தமிழகமும் இடம் பெராமல் இருக்க நீங்க்ளும் இத்த ப்லொக் ல் ஒரு பதிவு இடுவீர்கள் என நம்புகிறேன்.

இன்னும் உங்கள் மற்ற கேள்விகளுக்கும் பதில் அளிக்க நேரமின்மைக்கு வருந்துகிறேன்.

தேவையென்றால் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு நாளாக பதிலளிக்கிறேன்.


பஷீர்